Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

300 கிலோ கடல் அட்டை கடத்தல்….. தப்பி ஓட்டம்….. 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு…!!

தூத்துக்குடி அருகே ஆம்னி வேனில் கடத்த முயன்ற 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்த காவல்துறை  அதிகாரிகள் தப்பி ஓடிய 4 பேரை தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கடற்கரை பகுதியில் கடல் அட்டைகள் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு  ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் உதவி ஆய்வாளர் சுந்தரம் தலைமையில் இன்று அதிகாலை கடற்கரை பகுதியில் சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

  அப்போது ஆம்னி வேனில் கடல் அட்டைகள் கடத்தப்படுவதை பார்த்த உதவி ஆய்வாளர் கடத்தலில் ஈடுபட்டவர்களை துரத்திச் சென்றார். அங்கிருந்த நான்கு பேரும் தப்பி ஓடிய நிலையில் வேனில் இருந்த 300 கடல் அட்டைகளை காவல்துறையினர்  பறிமுதல் செய்து உரிய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Categories

Tech |