மோட்டார் சைக்கிள் மீது தனியார் பல்கலைக்கழக பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கோட்டையூர் கிராமத்தில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வாட்டர் சர்வீஸ் கடை வைத்து நடத்தி வைத்துள்ளார். இந்நிலையில் ராமச்சந்திரன் தனது உறவினரான உதய பிரகாஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வண்டலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர்கள் நல்லம்பாக்கம் கூட்ரோடு அருகே சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக சென்ற பேருந்து 2 மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த உதய பிரகாஷ் மற்றும் ராமச்சந்திரன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரின் சடலங்களையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் விபத்தை ஏற்படுத்திய தனியார் பல்கலைக்கழக பேருந்தின் கண்ணாடியை பொதுமக்கள் அடித்து உடைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன்பின் காவல்துறையினர் சமாதானப்படுத்தி அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.