வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள அலுச்சிபாளையம் பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ரமேஷுக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவரிடமிருந்து ரமேஷின் மனைவி விவாகரத்து பெற்றார். இதனையடுத்து ரமேஷ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் தனது சகோதரியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு இருக்கும் மாந்தோப்பில் ரமேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.