கோமாரி நோய் தடுப்பு ஊசி போடாததால் மர்ம நோய் தாக்கி 2 பசுமாடுகள் உயிரிழந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பனமரத்து வட்டம் பகுதியில் திடீரென எதிர்பாராதவிதமாக மர்ம நோய் தாக்கி கணேசன் என்பவருக்கு சொந்தமான இரண்டு பசுமாடுகள் உயிரிழந்துள்ளது. இது பற்றி அப்பகுதி மக்கள் கூறியதாவது, இப்பகுதியில் இந்த மாதம் மட்டுமே 15 மாடுகள் உயிரிழந்துள்ளது. இந்நிலையில் கோமாரி நோய் தடுப்பூசி போட யாரும் வராமல் இருந்துள்ளனர்.
அதனால் மாடுகளுக்கு நோய் அறிகுறிகள் இருப்பதாகக் கூறினாலும் மருத்துவர்கள் யாரும் வருவதில்லை. இது தொடர்பாக தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன், கால்நடை மருத்துவர் சத்யா மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு உடனடியாக கால்நடை உதவி இயக்குனருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இப்பகுதியில் கால்நடை மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்துள்ளனர்.