Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“பர்கூர் அருகே மர்மமான முறையில் இறந்த நபர்”… சரணடைந்த இரண்டு பேர்… “தங்கையிடம் ஆபாசமாக பேசியதாக வாக்குமூலம்”…!!!

தங்கையிடம் ஆபாசமாக பேசியதால் ராஜசேகர் என்பவரை கழுத்தை நெரித்து கொன்றதாக இரண்டு பேர் சரணடைந்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கந்திலி பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் சொந்தமாக சரக்கு வாகனம் ஓட்டி வந்த நிலையில் நஷ்டம் ஏற்பட்டதால் ஒன்றரை மாதத்திற்கு முன்பாக பர்கூரை அடுத்த பட்லப்பள்ளியில் தனது அக்கா வீட்டில் தங்கி பெயிண்டர் வேலைக்கு சென்று வந்த நிலையில் சென்ற 6 தேதி மர்மமான முறையில் தீர்த்தகிரிபட்டி ஏரி அருகே இறந்துகிடந்தார். உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணையில் ஈடுபட்ட போது கழுத்தை நெரித்து கொள்ளப்பட்டது தெரியவந்தது.

இதனால் அவர் கொலை செய்யப்பட்ட பகுதியிலுள்ள சிக்னலில் அங்கு வந்தவர்களின் எண்களை போலீஸார் விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் பர்கூர் ஒன்றியம் கரகுப்பம் பகுதியைச் சேர்ந்த திருப்பதி என்பவரும் முருகன் என்பவரும் கொலை செய்ததாக சரணடைந்துள்ளனர். இருவரும் வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது, ராஜசேகரின் சொந்த ஊரான கந்தலியில் எங்களது தங்கையை திருமணம் செய்து கொடுத்தோம்.

எங்களது தங்கையின் வீட்டிற்கு அருகே ராஜகுமார் வசித்து வந்தார். அவர் எங்களது தங்கையிடம் ஆபாசமாக பேசியதாக தங்கை எங்களிடம் கூறி அழுததால் ஆத்திரம் ஏற்பட்டதையடுத்து ஒன்றரை மாதத்திற்கு முன்பு பாட்டுலபள்ளி வந்த ராஜசேகரை நோட்டமிட்டு வந்தோம். சென்ற 5ஆம் தேதி இரவு ஏரிக்கு அழைத்துச் சென்று மது வாங்கி கொடுத்தோம். நள்ளிரவு நேரத்தில் அவரை கொன்று விட்டு நாங்கள் தப்பித்து வந்து விட்டோம். போலீசார் விசாரணையில் எங்களை நெருங்கி வந்த நிலையில் நாங்களாகவே சரண் அடைந்து உள்ளோம் என்று கூறினார்கள். இதனைத் தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |