ஜமாத் உத் தவா என்ற பயங்கரவாத இயக்கத்தை நடத்தி வரும் சயீத் என்பவருக்கு பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டிய வழக்கில் நீதிமன்றம் 33 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானிலிருந்து கொண்டு இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் நிறுவனராக இருந்த ஹபீஸ் சயீத் மும்பையில் கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த அதி பயங்கர வெடிகுண்டு தாக்குதலுக்கு மூளையாக இருந்துள்ளார். இந்த அதிபயங்கர தாக்குதலில் 166 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். இதனையடுத்து இ தொய்பா பயங்கரவாத இயக்கம் தடை செய்யப்பட்டதால் தற்போது அவர் ஜமாத் உத் தவா என்ற இயக்கத்தை நடத்தி வருகிறார்.
இதற்கிடையே இவர் மீது லாகூரிலுள்ள பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டிய குற்றத்திற்காக பல்வேறு வழக்குகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் சயீத்திற்கு பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டிய வழக்கு ஒன்றுக்கு அதிரடி தண்டனையை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி அவருக்கு 33 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அவர் கட்டிய மசூதியை அரசு கைப்பற்றுவதாகவும் தெரிவித்துள்ளது.