Categories
தேசிய செய்திகள்

ஐயையோ…. மீண்டும் லாக்டவுனா?….வெளியான பரபரப்பு கடிதம்….!!!!

மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்ததை அடுத்து, அனைத்து விதமான கட்டுப்பாடுகளையும் மாநில அரசுகள் கைவிடலாம் என சமீபத்தில் மத்திய அரசு பரிந்துரைத்திருந்தது. அதேசமயம், தொற்று பரவல் அதிகரிக்கும் பட்சத்தில், கட்டுப்பாடுகள் விதித்துக் கொள்ளவும் மாநிலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸின் புதிய திரிபான எக்ஸ்இ உலகம் முழுவதும் சில நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.

ஒமைக்ரான் வைரஸின் பிஏ.2 துணை மாறுபாட்டை விட எக்ஸ்இ எனப்படும் கொரோனா வைரஸின் புதிய திரிபானது, 10 சதவீதம் அதிகமாக பரவ வாய்ப்புள்ளதாக  உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் நாடு முழுவதும் சில மாநிலங்களில் கொரோனா தொற்று  பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், கேரளா, மிசோரம், மகாராஷ்டிரா, டெல்லி, ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

மேலும் கேரளாவில் கடந்த வாரம் புதிதாக 2,321 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதுவே ஒட்டுமொத்த இந்திய பாதிப்பில் 31.8 சதவீதமாக உள்ளது.
இதேபோல் கடந்த வாரம் டெல்லியிலும் புதிதாக 826 பேருக்கு தொற்று பாதிப்பு  உறுதியாகியுள்ளது. மேலும் கடந்த வார கணக்குப்படி, ஹரியாணாவில் புதிதாக 417 பேர் ,மகாராஷ்டிராவில் புதிதாக 794 பேர் மற்றும் மிசோரம் மாநிலத்தில் 814 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில், கேரளா, மிசோரம், மகாராஷ்டிரா, டெல்லி, ஹரியாணா ஆகிய மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது , “மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் சமூக, பொருளாதார நடவடிக்கைகளுக்கு முழு வீச்சில் அனுமதியளித்துள்ள நிலையில் கொரோனா நிலவரம் குறித்தும் தொடர் கண்காணிப்பு அவசியமாகிறது.”
மேலும், கொரோனா பரிசோதனை, தொற்று தொடர்பு கண்டறிதல், சிகிச்சை, தடுப்பூசி செலுத்துதல், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கண்ட மாநிலங்கள் பின்பற்றுமாறு அக்கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

.

Categories

Tech |