துலாம் ராசி அன்பர்கள்,
துலாம் ராசி அன்பர்களே இன்று குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். தோற்றப்பொலிவு கூடும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். இன்று மகிழ்ச்சியான நாளாகவே இருக்கும். வியாபாரம் தொடர்பான செலவுகள் கொஞ்சம் அதிகரிக்கும். தேவையான பண உதவி கிடைப்பதிலும் புதிய ஆர்டர்கள் கிடைப்பதிலும் தாமதம் கொஞ்சம் ஏற்படும். தொழில் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு கொஞ்சம் அதிகமாகும்.
இன்றைய நாள் எல்லா வகையிலும் உங்களுக்கு சந்தோசமும் மன நிம்மதியும் ஏற்படும். இன்று காதலர்களுக்கு பொன்னான நாளாக அமையும். காதலில் வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும். இன்று மாணவக் கண்மணிகள் கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்கள் படிக்க வேண்டி இருக்கும். சக மாணவர்களிடம் கோபப்படாமல் பேசுங்கள், ஆசிரியர்களிடம் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டு பாடங்களை படிப்பது ரொம்ப நல்லது.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிற உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவிலேயே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்களின் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் இளம் மஞ்சள் நிறம்