Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“தனுஷின் போட்டோவை பகிர்ந்து செல்வராகவன் போட்ட டுவிட்”… இணையத்தில் வைரல்…!!!

தனுஷின் புகைப்படத்தை பகிர்ந்து செல்வராகவன் போட்ட ட்விட்டர் பதிவானது வைரலாகி வருகின்றது.

துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார் தனுஷ். அதன் பிறகு தன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார் தனுஷ். அதன் பிறகே இவர்கள் இணைந்து படம் பண்ணாத நிலையில் பத்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் நானே வருவேன் திரைப்படத்தின் மூலம் இருவரும் இணைந்திருன்றார்கள்.

படப்பிடிப்பின்போது இருவரும் எடுத்துக் கொண்ட போட்டோக்களை அவ்வப்போது இணையத்தில் பகிர்ந்து வருகின்றார்கள். இந்நிலையில் தனுஷின் புகைப்படத்தை பகிர்ந்து செல்வராகவன் ட்விட் செய்துள்ளதாவது, “நீண்ட வருடங்களாக நாங்கள் எங்களின் சொந்த ப்ராஜெக்டுகளில் பிஸியாக இருந்ததால் இருவருமே தரமான நேரத்தை செலவிடும் வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கவில்லை. நானே வருவேன் திரைப்படத்தின் மூலம் எங்களுக்கு அந்த பொன்னான தருணம் கிடைத்துள்ளது. இந்த மனிதன் தங்க இதயம் கொண்ட சிங்கமென தனுஷின் போட்டோவை பகிர்ந்து ட்விட் செய்துள்ளார் செல்வராகவன்.

Categories

Tech |