Categories
மாநில செய்திகள்

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி…. தமிழகத்திற்கு குவியப்போகும் ஜவுளி ஆர்டர்….!!!

இலங்கையில் பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ள காரணத்தினால் இலங்கைக்கு செல்ல வேண்டிய ஆர்டர்கள் தமிழகத்திற்கு வர அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் அண்டை நாடான இலங்கையில் பொருளாதார சூழ்நிலை மிகவும் மோசமான நிலைமைக்கு செல்லப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவிற்கு பல ஆயிரம் கோடி ஜவுளி ஆர்டர்கள் குவிய வாய்ப்புள்ளதாக ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலக அளவில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் சரிக்கு சமமாக 4% ரெட்மேட் துணிகளை தயாரித்து வருகின்றன. இலங்கையிடம் உள்ள அந்த நான்கு சதவீத ஆர்டர்கள் தற்போது இந்தியாவிற்கு வர அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக மாவட்டமான திருப்பூர் அதிக பலன் அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |