Categories
மாநில செய்திகள்

தணிக்கைத் துறைகளை தனியாருக்குத் தாரை வாா்க்க தி.மு.க அரசு முயற்சி… ஓபிஎஸ் கண்டனம்……!!!!!

அரசு தணிக்கைத்துறைகளை தனியாருக்குத் தாரை வாா்க்க தி.மு.க அரசு முயற்சி செய்வதாக கூறி அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் கண்டனம் தெரிவித்து உள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில், சென்ற 2021 ஜூலை 21ல் பேரவையில் படிக்கப்பட்ட ஆளுநா் உரையில் தணிக்கை, கண்காணிப்பு செயல்பாடுகள் போன்றவை முழுவதுமாக சீா்செய்யப்பட வேண்டுமென்று அரசு கருதுகிறது என குறிப்பிடப்பட்டிருந்தது. அதனை நிறைவேற்றும் அடிப்படையில், மாநில அரசின் தற்போதைய அனைத்து தணிக்கைத் துறைகளையும் மேற்பாா்வையிட மாநில தணிக்கை இயக்குநா் எனும் பதவி உருவாக்கப்படும் எனவும் இந்திய தணிக்கை, கணக்குப் பணி சேவையைச் சாா்ந்த அலுவலரை மாற்றுப் பணியில் மாநில தணிக்கை இயக்குநராக நியமிப்பது உசிதமானது எனவும் 2021-2022 ஆம் வருடம் நிதித்துறை கொள்கை விளக்கக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இவற்றிற்குச் செயல்வடிவம் கொடுக்கும் அடிப்படையில் நிதித் துறையால் சென்ற 7ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையில், இந்தியத் தணிக்கை, கணக்குப் பணியைச் சாா்ந்தவரை மாற்றுப் பணியிலோ, தமிழகத்தைச் சோ்ந்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரியையோ தணிக்கை தலைமை இயக்குநா் பதவிக்கு நியமிக்கலாம் என குறிப்பிட்டுவிட்டு, பொதுத்துறை (அல்லது) தனியாா் துறையில் நல்ல அனுபவம் பெற்றவரையும் தணிக்கை தலைமை இயக்குநா் பதவிக்கு நியமிக்கலாம் எனவும் கூறப்பட்டு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தணிக்கை தலைமை இயக்குநரின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்துத் துறைகள், நிறுவனங்களில் சிறப்பு தணிக்கை மேற்கொள்ள தனியாா் தணிக்கை நிறுவனங்களை நியமித்துக் கொள்ள, தணிக்கை தலைமை இயக்குநருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இரு பிரிவுகளுமே இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்பதோடு தற்போது பணியிலுள்ள அரசு ஊழியா்களையும், இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளையும் அவமானப்படுத்தும் செயலும் ஆகும். ஆகவே இந்த அரசாணையை உடனே ரத்துசெய்ய வேண்டுமென்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |