விருச்சிக ராசி அன்பர்கள்,
இன்று நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தனவரவு உங்களுக்கு வந்து சேரும். ஆனால் இன்று நீங்கள் செய்யவேண்டியது கோபத்தை மட்டும் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். கோபத்தால் இழப்புகள் கொஞ்சம் ஏற்படும். குறைத்து மதிப்பிடாதீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்க தாமதம் ஏற்படும். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். இன்று எச்சரிக்கையுடன் எதிலும் ஈடுபடுங்கள், நீங்கள் அவசரமாக எதையும் செய்யக்கூடாது.
இன்று ஓரளவு காரியங்கள் வெற்றியை கொடுக்கும். பணவரவு வந்து சேரும், உடல் சோர்வு கொஞ்சம் ஏற்படலாம். இன்று வீன் கவலை வீண் வாக்குவாதங்கள் போன்றவை கூட ஏற்படும். முயற்சிகளில் வெற்றி ஏற்படும், எதிர்ப்புகள் ஓரளவு விலகி தான் செல்லும் இருந்தாலும் கவனமாக செயல்படுங்கள். இன்று மாணவர்கள் எதை பற்றியும் கவலைப்படாமல் பாடங்களை மட்டும் கூர்ந்து கவனித்துப் படியுங்கள் அது போதும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். இளஞ்சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாகவே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாக நடக்கும்.
அதிஷ்ட திசை: தெற்கு
அதிஷ்ட எண்: 1 மற்றும் 7
அதிர்ஷ்டநிறம்: இளஞ்சிவப்பு மற்றும் நீல நிறம்