தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக வேலைவாய்ப்பு முகாம்கள் எதுவும் நடைபெறாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து உள்ள சூழலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் யாராலும் ஆனால் இளைஞர்கள் கலந்து கொண்டு தேர்வு செய்யப்படுகின்றனர்.
இந்நிலையில் ஏப்ரல் 22, 23, 24ஆகிய தேதிகளில் அண்ணா பல்கலைக்கழகம் மிக பெரிய வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது. இந்த முகாமில் சுமார் 15 லட்சம் பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். தற்போது கல்லூரியில் படிக்கும் மாணவர்களும் பங்கேற்கலாம். இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் https://techknow2022.in/job-talent-registration என்ற வலைத்தள பக்கத்தில் ஏப்ரல் 10ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். இளைஞர்களை இந்த வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.