நாடு முழுவதும் கொரோனாவிற்கு எதிராக செயல்பட தடுப்பூசி ஒன்று மட்டுமே ஆயுதம் என்பதால் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவாக்சின், கோவிஷில்டுஆகிய தடுப்பூசிகளும் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது தவணையாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் டோஸ் போட்டுக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி ஒன்பது மாதங்கள் நிறைவடைந்த பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்றும் அரசு தெரிவித்துள்ளது. மேலும் அனைத்து தனியார் தடுப்பூசி மையங்களிலும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும்.