சென்னை மாநகராட்சியின்கீழ் இயங்கக்கூடிய உருது பள்ளிகள், ரமலான்நோன்பு தொடங்கி இருப்பதால் வரும் 30ம் தேதி வரை அரைநாள் மட்டுமே இயங்கும் என்று அதன் மாநகராட்சி அறிவித்து இருக்கிறது. இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பில் “சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து சென்னை உருது பள்ளித் தலைமையாசிரியா்களும் மாநகராட்சிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளனா்.
அந்த கடிதத்தில் ஏப்ரல் 3 முதல் ரமலான் நோன்பு தொடங்குவதால் அனைத்து சென்னை உருது பள்ளிகளும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை 5 பாடவேளைகள் மட்டும் செயல்பட அனுமதிக்க வேண்டும் என கோரியுள்ளனா். அந்த கடிதத்தின்படி சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து சென்னை உருது பள்ளிகளும் வருகிற 30ஆம் தேதி முதல் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை 5 பாடவேளைகள் செயல்படுவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.