Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

முத்துமாரியம்மன் கோவில் விழா…. பால் காவடி, பறவைக் காவடி எடுத்து நேர்த்திக்கடன்…. பக்திப் பரவசத்தில் மக்கள்….!!

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் பறவைக் காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றியுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகில் நார்த்தாமலையில் முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் காப்பு கட்டுதலுடன் ஆரம்பித்து திருவிழா நடைபெற்று வரும் நிலையில் 6-ம் நாள் திருவிழாவில் பக்தர்கள் மயில் காவடி, பால்குடம், பறவை காவடி, என்று  ஊர்வலமாக சென்று அம்மனுக்கு தங்களது நேர்த்திகடனை நிறைவேற்றியுள்ளனர்.பெண்கள் தங்களின் குழந்தைகளுக்கு கருப்பு தொட்டில் எடுத்து வைத்துனர்.

தீராத வயிற்று வலி இருப்பவர்கள் வாசலில் வயிற்றில் மாவிளக்கு வைத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தியுள்ளனர். மேலும் அந்த பகுதியை சேர்ந்த ஒரு பக்தர் உடலில் அலகு குத்தி அந்தரத்தில் தொங்கியபடி பறவை காவடி எடுத்து அம்மனுக்கு நேர்த்தி கடனை நிறைவேற்றியுள்ளார். இந்தப் பறவை காவடி பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஏராளமான பக்தர்கள் ஊர்வலமாக சென்று தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை வழிபட்டு சென்றனர்.

Categories

Tech |