மூதாட்டியிடம் 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் பகுதியில் வசித்து வருபவர் பெரியகருப்பன். இவருடைய மனைவி 65 வயதுடைய முத்தம்மாள். சம்பவத்தன்று முத்தம்மாள் அரிமளத்திலிருந்து புதுக்கோட்டைக்கு அரசு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருக்கையில் ராம் தியேட்டர் பேருந்து நிறுத்தம் அருகில் வரும்போது அவர் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து முத்தம்மாள் புதுக்கோட்டை டவுன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து சங்கிலி பறித்து சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.