Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மாணவிக்கு காதல் தொல்லை….. வாலிபர் கைது…. போலீஸ் அதிரடி…!!

மாணவிக்கு தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பீச்ரோடு பகுதியில் கௌதம் என்பவர் வசித்து வருகிறார். இவர் பிளஸ்-1 மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்துள்ளார். ஆனால் மாணவி கௌதமை காதலிக்க முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் மாணவியின் வீட்டிற்கு சென்று தன்னை காதலிக்குமாறு கூறி தகராறு செய்துள்ளார். இதுகுறித்து மாணவி நாகர்கோவில் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கௌதமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |