பஞ்சாயத்து தலைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கோவளம் பகுதியில் ஜெபமாலை-ஜாண் ப்ளோரா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் கிடையாது. இதில் ஜாண் ப்ளோரா முன்னாள் பஞ்சாயத்து தலைவியாக இருந்துள்ளார். இவருடைய கணவர் ஜெபமாலை கடந்த சில வருடங்களாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு படுக்கையில் முடங்கியுள்ளார். இதனால் ஜாண் ப்ளோரா மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார்.
இந்நிலையில் ஜாண் ப்ளோரா திடீரென வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை மேலே ஊற்றிக் கொண்டு தீக்குளித்துள்ளார். இதில் ஜாண் ப்ளோரா உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கன்னியாகுமரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஜாண் ப்ளோராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.