மீன்பிடி திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மலைக்குடிப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள கண்மாய் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் நிரம்பியுள்ளது. இதனால் கிராம மக்கள் சார்பில் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கண்மாயில் வைத்து நேற்று நடைபெற்ற திருவிழாவில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அதன்பின்னர் பொதுமக்கள் சேலை, வேட்டி, வளை போன்றவற்றை பயன்படுத்தி கட்லா, விரால், கெண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களை பிடித்தனர்.
அதன் பின்னர் பொதுமக்கள் தாங்கள் பிடித்த மீன்களை தங்களது வீடுகளுக்கு மகிழ்ச்சியாக எடுத்து சென்றுள்ளனர். இந்த விழா நடைபெற்றால் ஆண்டு முழுவதும் மழை பொழிந்து விவசாயம் செழிக்கும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.