இலங்கையை தற்போதைய நெருக்கடியிலிருந்து மீட்க 6 மாதங்களில் 3 பில்லியன் டாலர்கள் தேவைப்படும் என்று அந்நாட்டின் நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக செய்திநிறுவனத்திடம் அவர் பேசியதாவது “இப்போதைய சூழலில் நிதி திரட்டுவது கடினமான பணி என்று அவர் குறிப்பிட்டார். இதற்காக 1 பில்லியன் டாலர் தொகைக்கு மேல் உள்ள பத்திரதாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன் அரசை எதிர்க்கும் மக்களின் உரிமையை தாங்கள் மதிப்பதாக கூறினார். ஆனால் அது எதிர்விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.