டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் தூய்மை தினம் கடைபிடிக்கப்பட்டது.
தமிழகத்தில் மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை காவல் நிலையங்கள், போலீஸ் குடியிருப்புகள், போலீஸ் துறைக்கு சொந்தமான நிலங்கள் ஆகிய அனைத்தையும் சுத்தமாக வைத்திருக்க தூய்மை தினத்தை கடைபிடிக்க வேண்டும் என்று டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று காவல்துறையினர் தூய்மை தினத்தை கடை பிடித்துள்ளனர்.
இதனையடுத்து போலீஸ் குடியிருப்புகளில் சுத்தம் செய்யும் பணியை காவல்துறையினர் மற்றும் தூய்மை பணியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். இந்த தூய்மை பணி திருவள்ளுவர் நகர், மார்தாண்டபுரம் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள காவல்துறை குடியிருப்புகளில் நடந்தது. இந்த பணியை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு வில்லிகிரேஸ் பார்வையிட்டபோது, கணேஷ் நகர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் முகம்மது ஜபார் உடனிருந்தார்.