தமிழகத்தில் உள்ள அனைத்து மீனவர்களுக்கும் விரைவில் சாட்டிலைட் போன் வழங்கப்படும் என அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். கால்நடைகளுக்கான தீவன தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கால்நடைப் பண்ணைகளில் பணிபுரிபவர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என்ற புகார் இருந்தால் உடனடியாக அதை கூறினால் சரி செய்யப்படும். கடலில் கூண்டு கட்டி அதில் மீன் வளர்த்து அதை ஏற்றுமதி செய்யும் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
மீனவர்கள் யாரும் வேண்டுமென்றே இலங்கை வேலைக்கு செல்வதில்லை. கடலில் எல்லை தெரியாத காரணத்தினால் அவர்கள் கைதாகின்றனர். சில நேரம் காற்று இழுத்துச் செல்கின்றது. அதனை தடுக்கும் வகையில் வெளியுறவுத்துறை மற்றும் பிரதமரிடம் முதலமைச்சர் எடுத்துக்கூறி மீன்பிடிப்பதற்கு பாதுகாப்பான நிலையை உருவாக்க திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.