Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ரயிலில் கஞ்சா கடத்தல்…. சிறுவன் உட்பட குடும்பமே கைது…. போலீஸ் அதிரடி….!!

ரயிலில் கஞ்சா கடத்திய குடும்பத்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

சேலம் வழியாக செல்கின்ற ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதை தடுப்பதற்காக சேலம் ரயில்வே காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் தனிப்படை அமைத்து சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் சேலம் ரயில்வே காவல்துறையினர் மற்றும் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமாரின் சிறப்பு தனிப்படையினர் இணைந்து வண்டி எண் 17230 கொண்ட ஹைதராபாத் – திருவனந்தபுரம் சபரி எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை நடத்தினர்.

அப்போது எஸ் 5 பெட்டியில் சந்தேகப்படும்படி மூன்று பேர் இருந்தார்கள். அவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன் மனைவி மற்றும் மகன் என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்து பார்த்தபோது அதில் 13 பொட்டலங்களில் 22 கிலோ கஞ்சா இருந்ததுள்ளது.

இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவர்கள் மதுரை முத்துப்பட்டியில் வசித்து வந்த கண்ணன், அவருடைய மனைவி சித்ரா, மற்றும் அவர்களுடைய மகன் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் ஆந்திராவிலிருந்து கஞ்சாவை கடத்தி வந்துள்ளனர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை காவல்துறையினர் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |