மிதுனம் ராசி அன்பர்கள், இன்று எதிர்பாராத பணவரவு ஏற்படும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்பனையாகும் உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லிக் கொடுப்பார்கள். தொட்டது துலங்கும் நாளாகவே இருக்கும். மனதில் தைரியம் பிறக்கும். எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஏற்படும்.
எதிலும் முன்னேற்றம் காணப்படும். உங்கள் இஸ்டத்திற்கு விரோதமாக காரியங்கள் நடந்தாலும், முடிவு உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். வீண் ஆசைகள் மனதில் தோன்றும். மன கஷடம் குறையும். ஆனால் செலவு மட்டும் கொஞ்சம் கூடும். பார்த்து கொள்ளுங்கள். இன்று உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் போன்றவை ஏற்படும்.
இன்று மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்பு இருக்கும். மேற்கல்விக்கான முயற்சியில் வெற்றி இருக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் ஆரஞ்சு