ஆர்ஆர்ஆர் திரைப்படம் உலக அளவில் 1000 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. பாகுபலி என்ற பிரம்மாண்ட படைப்பிற்கு பிறகு அதன் இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் உருவான RRR திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் அனைவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.
இவர்களுடன் ஆலியா பட், ஸ்ரேயா சரண், அஜய் தேவ்கன் மற்றும் சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் இந்த படம் வெளியானது. இந்நிலையில் இந்த படம் 1000 கோடி ரூபாய் வசூல் செய்து மிகப்பெரிய சாதனையைப் படைத்துள்ளது.