Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இனிமே 2-வது சனிக்கிழமையில்…. போலீசாருக்கு அதிரடி அறிவிப்பு…. டி.ஜி.பி-யின் திடீர் உத்தரவு….

மாதந்தோறும் 2-வது சனிக்கிழமையை தூய்மை தினமாக கடைபிக்க காவல்துறையினருக்கு தமிழக டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் மாதந்தோறும் 2-வது சனிக்கிழமையை காவல்துறையினர் தூய்மை தினமாக கடைபிடிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில் காவல்நிலையம், போலீஸ் குடியிருப்புகள் மற்றும் காவல்நிலைய வளாகம் ஆகிய இடங்களை சுத்தப்படுத்த வேண்டும் என டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

அந்த உத்தரவின் அடிப்படையில் நாமக்கல் மாவட்டம் துணை சூப்பிரண்டு அதிகாரி சுரேஷ் தலைமையில் காவல்துறையினர் பரமத்தி சாலையில் உள்ள துணை சூப்பிரண்டு அலுவலக வளாகம், குடியிருப்பு போன்ற இடங்களை தூய்மை செய்துள்ளனர். இதேபோல் அனைத்து பகுதிகளிலும் போலீசார் காவல்நிலைய வளாகம், குடியிருப்பு போன்ற பகுதிகளை சுத்தம் செய்துள்ளனர்.

Categories

Tech |