Categories
அரசியல்

ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி குறைப்பு…. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி திடீர் அறிவிப்பு….!!!

பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்து அறிவித்துள்ளது. அதன்படி 2 கோடி ரூபாய்க்கு உட்பட்ட டெபாசிட் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. புதிய வட்டி விகிதங்கள் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. வட்டி குறைப்பு நடவடிக்கை ஒரு ஆண்டுக்கு உட்பட்ட குறுகிய கால டெபாசிட்களுக்கு மட்டுமே எனவும் தெரிவித்துள்ளது.

புதிய வட்டி:

7 – 45 நாட்கள் : 3% (முந்தைய வட்டி – 3.4%)

46 – 90 நாட்கள் : 3.5% (முந்தைய வட்டி – 3.90%)

91 – 179 நாட்கள் : 4% (முந்தைய வட்டி – 4.4%)

180 – 364 நாட்கள் : 4.5% (முந்தைய வட்டி – 4.90%)

இவை அனைத்தும் குறுகிய கால டெபாசிட்டுக்கான வட்டி விகிதங்கள். 1 -2 ஆண்டு டெபாசிட்டுக்கு 5.15% வட்டி வழங்குகிறது. 444 நாட்களுக்கு 5.20% வட்டி வழங்குகிறது. 2 முதல் 3 ஆண்டுவரையிலான டெபாசிட்டுக்கு 5.20% வட்டி வழங்குகிறது. 3 ஆண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட டெபாசிட்டுக்கு 5.45% வட்டி வழங்குகிறது.

Categories

Tech |