Categories
அரசியல்

மாணவர்களே…. இனி இதை செய்யாவிட்டால் உதவித்தொகை கிடையாது?…. மத்திய அரசு திடீர் முடிவு….!!!!

பான் கார்டு மற்றும் ரேஷன் கார்டு போன்ற ஆவணங்களுடன் ஆதார் அட்டையை கட்டாயமாக்க இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆதார் கார்டுடன் சாதிசான்றிதழ் மற்றும் வருமானச் சான்றிதழை இணைக்க மத்திய அரசு தற்போது திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் திட்டம் முதற்கட்டமாக சில மாநிலங்களில் மட்டும் அமல்படுத்தி பரிசோதித்து அரசு திட்டமிட்டுள்ளது.

மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை திட்டத்தில் திருத்தம் செய்வதற்காக ஆதார் கார்டுடன் சாதிசான்றிதழ் மற்றும் வருமானச் சான்றிதழ் இணைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சமூகத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு அரசு உதவித் தொகை வழங்கி வருகிறது. இந்த நிலையில் தகுதியுள்ள மாணவர்களுக்கு மட்டும் உதவித்தொகை சென்று சேர்வது உறுதி செய்வதற்காக ஜாதி சான்றிதழ் மற்றும் வருமானச் சான்றிதல் உடன் ஆதார் கார்டை இணைக்க அரசு முடிவு செய்துள்ளது.

மாணவர்களின் ஜாதியும் வருமானமும் தெரிந்து விட்டால் யார் யார் தகுதியான பயனாளிகள் என்பதை எளிதில் கண்டறிய முடியும். இதன் மூலமாக தகுதியுள்ள மாணவர்களுக்கு மட்டும் உதவித்தொகை கிடைப்பது மட்டுமல்லாமல் தாமதமின்றி விரைவாக பணம் செலுத்தப்படும் என கூறப்படுகின்றது. மேலும் மாணவர்களின் வங்கிக் கணக்கிற்கு உதவித்தொகை நேரடியாக செலுத்தப்படும்.

Categories

Tech |