Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு… இனி கணினி வழியில் தேர்வு நடத்தப்படும்?…. மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழ்நாடு அரசு அலுவலக பணியிடங்கள் அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) மூலம் நிரப்பப்படுகிறது. இதற்காக போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். இதனிடையில் போட்டித் தேர்வுகளின் விடைத்தாளானது ஓ.எம்.ஆர் முறைப்படி இருக்கும். இந்த நிலையில் சென்ற 2019 ஆம் வருடம் தான் இறுதியாக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகள் நடத்தப்பட்டது. இதையடுத்து கொரோனா தொற்று காரணமாக அனைத்து பொது நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் கொரோனா தொற்று பரவும் அபாயம் அதிகளவில் இருந்து வந்ததால் அரசு பணி தேர்வுகள் அனைத்தும் தள்ளிவைக்கப்பட்டது.

இப்போது கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து இயல்புநிலை திரும்ப தொடங்கியுள்ளதால் தேர்வுகளை நடத்த அரசு திட்டமிட்டு இருக்கிறது. அந்த வகையில் முதற்கட்டமாக குரூப்-2, 2ஏ மற்றும் குரூப் 4 ஆகிய தேர்வுகளை அறிவித்துள்ளது. இதேபோன்று மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பணியிட வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணயம் வெளியிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சென்ற ஏப்ரல் 1ஆம் தேதி அன்று வெளியிட்டுள்ள நிலையில், மொத்தம் 16 காலியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பணி இடத்திற்கு ஜூன் 19ஆம் தேதி காலை 9:30 முதல் 12:30 மணிவரை தமிழ் தகுதித்தேர்வு மற்றும் பிற்பகல் 2 மணி முதல் 5 மணிவரை பொதுஅறிவுத் தேர்வு நடைபெற இருக்கிறது. இதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. இந்த நிலையில் இதுவரையிலும் அனைத்து தேர்வுகளும் எழுத்து முறையில் நடந்து வந்த நிலையில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பணியிடத்திற்கு கணினி வழியே தேர்வுகள் நடத்தப்பட இருக்கிறது. தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். மேலும் தகவல்கள் அதிகாரபூர்வ தளத்தில் சென்று அறிந்துகொள்ளலாம்.

Categories

Tech |