Categories
உலக செய்திகள்

இலங்கை நிதி நெருக்கடி…. சமாளிக்க வழி சொல்லும்… மத்திய வங்கியின் புதிய கவர்னர்…!!!

இலங்கையில் ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்க முடியும் என்று மத்திய வங்கியின் புதிய கவர்னர் கூறியிருக்கிறார்.

இலங்கையில் நிதி நெருக்கடி ஒவ்வொரு நாளும் வெகுவாக அதிகரித்து வருகிறது. எனவே மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. எரிபொருள் தட்டுப்பாடு, பல மணி நேரங்கள் மின்தடை, பணியாளர்கள் வேலை நிறுத்தம், தொழில்சாலைகள் அடைப்பு என்று நாடு முழுக்க இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்ட நந்தலால் வீரசிங்கே, நாட்டில் தற்போது வரை இல்லாத அளவிற்கு ஏற்பட்ட மோசமான நிதி நெருக்கடியை சமாளிப்பது தொடர்பில் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். அவர் மத்திய வங்கியை சுதந்திரமாக செயல்படுவதற்கு அனுமதி வழங்கினால் நாட்டில் நிதி நெருக்கடியை சமாளிக்க முடியும் என்று கூறியிருக்கிறார்.

அவர் தெரிவித்திருப்பதாவது, மத்திய வங்கியை சுதந்திரமாக நடத்தக்கூடிய அதிகாரத்தை அதிபர் கோட்டபாய ராஜபக்ஷ எனக்கு வழங்கியிருக்கிறார். இந்த நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்க தேவையான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறும் அவர் கேட்டிருக்கிறார். அரசியல் தலையீடு எதுவும் இல்லாமல் அனைத்து தீர்மானங்களையும் மேற்கொள்ளக்கூடிய சுதந்திர நிறுவனமாக மத்திய வங்கியை பாதுகாப்பதே என் இலக்கு.

இந்த நெருக்கடியிலிருந்து தீர்வுகாண தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டிருக்கிறோம். உண்மை மற்றும் வெளிப்படையாக நாங்கள் இருப்போம். மேலும் வங்கியினுடைய முழுமையான ஆதரவு எங்களுக்கு தேவைப்படுகிறது. நாட்டில் இருக்கும் பிரச்சனைகள் அதிக சவாலாக இருக்கிறது. அதனை தீர்க்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |