Categories
விளையாட்டு

IPL 2022: நானும் தோல்விக்கு ஒரு காரணம்…. மும்பை கேப்டன் ஓபன் டாக்…..!!!!!!

IPL போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டங்களில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும், 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சும் 4வது தோல்வியை தழுவியது. மும்பை டிஒய்பட்டீல் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்திடம் வீழ்ந்தது. இதனால் CSK தொடர்ந்து 4-வது தோல்வியை தழுவியது. புனேயில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதியது. அப்போது முதலாவதாக விளையாடிய மும்பை அணியானது 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 151 ரன் எடுத்து குவித்தது. இதன் காரணமாக பெங்களூர் அணிக்கு 152 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதில் சூர்யகுமார் யாதவ் அதிகபட்சம் 37 பந்தில் 68 ரன் (5 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்தனர். கேப்டன் ரோகித்சர்மா 15 பந்தில் 26 ரன் (4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார். பில் ஹசரங்கா, ஹர்‌ஷல் படேல் தலா 2 விக்கெட் வீழ்த்தினார்கள். அதனை தொடர்ந்து விளையாடிய பெங்களூரு அணி 18.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 152 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது. அனுஜ் ராவத் 47 பந்தில் 66 ரன்னும் (2 பவுண்டரி, 6 சிக்சர்), விராட் கோலி 36 பந்தில் 48 ரன்னும் (5 பவுண்டரி) எடுத்து குவித்தனர். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியானது தொடர்ச்சியாக 4வது தோல்வியை தழுவியது. இத்தோல்விக்காக கேப்டன் ரோகித்சர்மா தன்னை தானே குற்றம் சாட்டிக் கொண்டார்.
இது குறித்து அவர் கூறியதாவது “எங்களிடம் உள்ள வெளிநாட்டு வீரர்களில் சிறந்த 2 பேரை தேர்ந்தெடுத்தோம். நான் முடிந்தவரையிலும் பேட் செய்ய விரும்பினேன். எனினும் தவறான நேரத்தில் வெளியேறி விட்டேன். நாங்கள் 50 ரன்வரை பார்ட்னர்ஷிப்பில் இருந்தோம். ஆனால் தவறான மோதலில் நான் அவுட் ஆகியதால் எங்களுக்கு வலியை ஏற்படுத்தியது. இந்த விளையாட்டில் 150 ரன் போதுமானது இல்லை என கண்டிப்பாக தெரியும். சூர்யகுமார் யாதவ் சிறப்பாக ஆடியதால்தான் இந்த ரன்வந்தது. இருந்தாலும் 151 ரன்னை வைத்து பந்துவீச்சாளர்களால் ஒன்றும் செய்யமுடியாது என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |