Categories
உலக செய்திகள்

9 வருடங்களாக சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை… 23 வருடங்கள் ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்…!!!

பிரிட்டனில் சிறுமிகளை தனி வீட்டில் வைத்து 9 வருடங்களாக வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

பிரிட்டனிலுள்ள Nottinghamshire என்ற பகுதியில் வசிக்கும் மேத்யூ இலிஸ் என்னும் 35 வயது நபர் சிறுமிகளை ஒரு வீட்டில் அடைத்து வைத்து 9 வருடங்களுக்கும் அதிகமாக பாலியல் வன்கொடுமை செய்து வந்திருக்கிறார். மேலும் இதை யாரிடமும் கூறக்கூடாது என்று மிரட்டியுள்ளார்.

இது மட்டுமல்லாமல் இங்கு நடப்பது இரகசியமான விளையாட்டு என்று கூறி சிறுமிகளை ஏமாற்றியுள்ளார். எனினும் கடந்த 2019 -ஆம் வருடத்தில் சிறுமிகள் இதுபற்றி வெளியில் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து தற்போது அவரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.

இந்த வழக்கு, நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், அவருக்கு 23 வருடங்கள் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

Categories

Tech |