Categories
உலக செய்திகள்

9 பேர் மரணம்….. 6 நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ்….. உலகம் முழுவதும் பரவும் அபாயம்….!!

சீனாவைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் கொரோனா  வைரஸ் தொற்று பரவியது அமெரிக்க மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனாவில் 9 பேர் பலியாகி உள்ள நிலையில் தற்போது இந்த வைரஸ் அமெரிக்காவிலும் பரவியுள்ளது. வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக உரிய நடவடிக்கை எடுக்க சீன அதிபர் உத்தரவிட்டுள்ள நிலையில், சீனாவிலிருந்து  வாஷிங்டனுக்கு வந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் வாஷிங்டன்னின் தனியார் மருத்துவமனையில் தனியாக தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்த வைரஸ் எளிதில் பரவக்கூடியது என்பதால் அமெரிக்காவில் வேறு யாருக்கும் வைரஸ் தொற்று உள்ளதா என்று கண்டறிய ஆய்வு நடத்தப்பட்டு வருகின்றது. இதேபோல் ஜப்பான் தென்கொரியா அமெரிக்கா மற்றும் தைவான் நாடுகளில் தல ஒரு நபரும்  தாய்லாந்தில் மூன்று கொரோனா பேரும் வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.

Categories

Tech |