உக்ரைன் நாட்டில் ஒரு சிறு குழந்தையிடம் ரஷ்ய வீரர் மோசமாக நடந்துகொண்ட வீடியோ வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
ரஷ்ய படைகள் சுமார் 40 நாட்களுக்கும் மேலாக உக்ரைன் நாட்டில் தீவிரமாக போர் தொடுத்து வருகிறது. இந்நிலையில், ஒரு ரஷ்ய வீரர் வெளியிட்ட வீடியோ கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் இருந்த வீரர் தற்போது கைதாகியிருக்கிறார்.
ஐக்கிய நாடுகள் மன்றத்தில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, தங்கள் நாட்டின் மரியுபோல், இர்பின், டைமர்கா, புச்சா போன்ற பகுதிகளில் ரஷ்ய படையினர் கண்மூடித்தனமாக மேற்கொண்ட தாக்குதல்களை குறும்படமாக காட்டியிருக்கிறார்.
அதில், எரிந்த உடல்கள், கை கால்கள் வெட்டப்பட்ட சடலங்கள், சிறுவர்கள் உள்பட சித்திரவதை செய்யப்பட்ட உடல்கள் பதிவாகியிருந்தது. எனினும், ரஷ்யா அரசு இதனை முற்றிலுமாக மறுத்திருக்கிறது.