சூறைக்காற்றுடன் பலத்த கனமழை பெய்ததால் வாழை மரங்கள் சாய்ந்தன.
சேலத்தில் கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சில இடங்களில் மழை பெய்தது. இதை தொடர்ந்து நேற்று காலையில் வெயில் தாக்கம் சற்று இருந்தது. அதன் பின்னர் பிற்பகல் திடீரென சேலம் மாவட்டத்தில் பல இடங்களில் மழை பெய்தது. இதை போன்று தலைவாசல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மணிவிழுந்தான் சார்வாய் சார்வாய் புதூர் தேவியாக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று மாலை 5 மணிக்கு திடீரென்று சூறைக்காற்றுடன் பலத்த கனமழை பெய்தது.
இந்த கனமழையால் தேவியாக்குறிச்சியில் வசித்து வந்த விவசாயி ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான 2 ஏக்கர் பரப்பளவு வாழை தோப்பில் இருந்த வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளன. இதை தொடர்ந்து பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்த நிலையில், வீடுகளின் மேற்கூரைகள் பறந்து போயின.