Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தகராறு செய்த வாலிபர்கள்…. சமாதானப்படுத்திய வியாபாரி…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

மினிவேன் கண்ணாடியை உடைத்து வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 வாலிபர்கள் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்கமகளூரு மாவட்டம் கலத்திபுரா பகுதியில் வியாபாரியான கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக மினிவேன் ஒன்று உள்ளது. இவர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு வந்து விளையும் காய்கறிகளை கொள்முதல் செய்து வேனில் கர்நாடக மாநிலத்தில் கொண்டு சென்று விற்பனை செய்வது வழக்கம். இந்நிலையில் கோவிந்தராஜ் காய்கறி வாங்குவதற்காக பூண்டி கிராமத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது இரண்டு வாலிபர்கள் வேனை வழிமறித்து கோவிந்தராஜுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த முறை வேனில் வந்த கோவிந்தராஜ் தங்களது மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டதாக அந்த வாலிபர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அப்போது கோவிந்தராஜ் அவர்களை சமாதானம் செய்துள்ளார். அதற்குள் வாலிபர்கள் வேன் கண்ணாடியை உடைத்ததோடு, கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து கோவிந்தராஜ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அய்யாதுரை, முகமது ஆகிய 2 வாலிபர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |