Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த கார்…. வீட்டிற்குள் புகுந்ததால் பரபரப்பு… அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் சுவரை உடைத்து கொண்டு வீட்டிற்குள் புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள சிக்கந்தர் சாவடியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் காரை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் முத்துக்குமார் மதுரையில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். இவர் நத்தம் அருகே புதுக்கோட்டை முடக்கு சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடி செல்வம் என்பவரது வீட்டின் சுவரை இடித்து கொண்டு வீட்டிற்குள் புகுந்தது.

அப்போது செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் கோவில் திருவிழாவிற்கு சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் முத்துக்குமார் லேசான காயத்துடன் உயிர் தப்பிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துக்குமாரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |