நடிகை சமந்தா நாக சைதன்யாவின் தம்பிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு என இரண்டு திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. இவர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் வெளியீட்டிற்காக காத்துள்ளது. இவர் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு பிரிவதாக அறிவித்தார். விவாகரத்துக்குப் பின் சமந்தா ஆக்டிவாக செயல்பட்டு வருகின்ற நிலையில் கவர்ச்சியாகவும் நடித்து வருகின்றார்.
இந்த நிலையில் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாக சைதன்யாவின் சகோதரர் அகில் அக்கினேனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “இந்த ஆண்டு உங்களுக்கு மிகச் சிறந்த ஆண்டாக இருக்கும். நீங்கள் நினைத்த அனைத்துமே கிடைக்க நான் இறைவனை வேண்டுகிறேன். கடவுள் உங்களுக்கு அருள் புரிவார்” என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவு தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு நாக சைதன்யாவின் பிறந்தநாளுக்கு கூட வாழ்த்து சொல்லாத சமந்தா தற்போது அவருடைய தம்பிக்கு மட்டும் வாழ்த்து தெரிவித்திருப்பது நாக சைத்தன்யாவை பெறுவதற்காக தானா என்று நெட்டிசன்கள் கமெண்ட் தெரிவித்து வருகின்றனர்.