ஓட்டுனருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் பேருந்து தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலிருந்து 20 பயணிகளை ஏற்றிக்கொண்டு திருப்பூர் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை பழனிசாமி என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை ரோட்டில் அரசு பேருந்து சென்று கொண்டிருந்த போது பழனிச்சாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. உடனடியாக பழனிச்சாமி சாமர்த்தியமாக பிரேக்கை அழுதியுள்ளார். அதற்குள் அரசு பேருந்து சாலையில் தடுப்பு சுவர் மீது மோதியதால் பேருந்தின் முன்பகுதி சேதமடைந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் உடனடியாக பேருந்திலிருந்து கீழே இறங்கிவிட்டனர். இதனை அடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பழனிச்சாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பழனிசாமி சாமர்த்தியமாக பேருந்தின் வேகத்தை குறைத்து பிரேக் பிடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.