Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மாநில அளவிலான மல்யுத்தப் போட்டி தொடக்கம்…. “காந்தி விளையாட்டு மைதானத்தில் கலைக்கட்டும் மல்யுத்த போட்டி”… !!!

சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான மல்யுத்தப் போட்டி 2-வைது நாளாக நடைபெற்று வருகின்றது.

சேலம் மாவட்டத்தில் உள்ள காந்தி விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான மல்யுத்தப் போட்டி நேற்று தொடங்கிய நிலையில் மாவட்ட வணிகர் சங்க பேரவை தலைவர் ராசி சரவணன் போட்டியை தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, கடலூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து 246 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டார்கள். 10 பிரிவுகள் அடிப்படையில் போட்டிகள் நடத்தப்பட்டது. அங்கிருந்தவர்கள் விளையாட்டு வீரர்களை கைதட்டி விசிலடித்து உற்சாகப்படுத்தினர்.

வீரர்களும் வீராங்கனைகளும் மல்யுத்த போட்டியில் தங்களது திறமைகளை வெளிப்படுத்திய நிலையில் சிறந்த மல்யுத்த வீரர் வீராங்கனைகளுக்கு மொபட் பரிசாக வழங்கப்பட்டது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று 2-வது நாளாக மல்யுத்தப் போட்டி நடை பெறுகின்றது. இன்றும் பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மல்யுத்த சங்கத்தின் பொதுச்செயலாளர் லோகநாதன், துணை செயலாளர் கோபிநாத், விழா ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் குமார் உள்ளிட்ட பலர் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

Categories

Tech |