முதியவர் கல்குவாரியில் தவறி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தருவையில் கூலித் தொழிலாளியான ஆரோக்கியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த முதியவர் அப்பகுதியில் இருக்கும் தோட்டத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு சென்ற போது ஆரோக்கியசாமி எதிர்பாராதவிதமாக கல் குவாரியில் தவறி விழுந்துவிட்டார்.
இதனால் படுகாயமடைந்த ஆரோக்கியசாமியை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே ஆரோக்கியசாமி பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.