Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பிறந்த குழந்தையை பார்க்க சென்ற தந்தை…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கீழதேவநல்லூரில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிகண்டனின் மனைவிக்கு திருநெல்வேலியில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் மனைவி மற்றும் குழந்தையை பார்ப்பதற்காக மணிகண்டன் மோட்டார் சைக்கிளில் நெல்லை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

இவர் பொன்னாக்குடி பகுதியில் சென்ற போது மணிகண்டன் மோட்டார் சைக்கிள் மீது மற்றொரு மோட்டார் சைக்கிள் பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மணிகண்டனை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |