தந்தையை தாக்கிய குற்றத்திற்காக மகனை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் வயல் தெருவில் இசக்கி முத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சக்திவேல் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தந்தைக்கும், மகனுக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த சக்திவேல் தனது தந்தையை தாக்கியுள்ளார்.
இதுகுறித்து இசக்கிமுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருந்த சக்திவேலை அதிரடியாக கைது செய்தனர்.