ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், மேற்கத்திய நாடுகளுக்கு ராணுவ தகவல்களை தெரிய படுத்தியதாக கூறி சிறப்பு புலனாய்வுத் துறையின் ஜெனரலை கொடூர சிறையில் அடைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ரஷ்ய நாட்டின் சிறப்பு புலனாய்வுப் படையினுடைய ஐந்தாம் பிரிவின் தலைவர், ஜெனரல் செர்ஜி பெசேடா. இவர் மீது, மேற்கத்திய நாடுகளுக்கு இராணுவம் குறித்த முக்கிய தகவல்களை தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, அவரை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தடுப்புக்காவலில் என்ற லெஃபோர்டோவோ சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இவரை கைது செய்வதற்கு முன்பாக, வீட்டுக்காவலில் வைத்திருந்தனர். இந்நிலையில், தற்போது கொடூரமான, சந்தேகத்திற்குரிய விரோதிகளை அடைத்துவைக்கும் லெஃபோர்டோவோ சிறையில் அடைத்திருக்கிறார்கள். மேலும், செர்ஜி பெசேடாவின் துணை அதிகாரியான அனடோலி பாலியுவையும் தடுப்பு காவலில் வைத்துள்ளனர்.