Categories
தேசிய செய்திகள்

தலைநகர் டெல்லியில் அடுத்தடுத்து பயங்கரம்…. பீதியில் மக்கள்….!!!!

தலைநகர் புதுடெல்லியில் உள்ள காஜிபூர் என்ற குப்பை கிடங்கில் சனிக்கிழமை அன்று இரவு 10.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதன்பின் நள்ளிரவு 1 மணி அளவில் தீ அணைக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து தீயணைப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது, குப்பை மேடுகளுக்கு தீ பரவி, புகை கிளம்பியதை அடுத்து, எங்களுக்கு இரவு 10.30 மணியளவில் அழைப்பு வந்தது.
உடனே நாங்கள் சம்பவ இடத்துக்கு, 10-15 நிமிடங்களுக்குள் 4 தீயணைப்பு வாகனங்களை அனுப்பி, நாங்கள் விரைந்து செயல்பட்டு முதலில் தீயை கட்டுப்படுத்தினோம் என்று கூறியுள்ளார். மேலும் 3 மணி நேரத்திற்கும் மேலாக தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் கொண்ட்லியில் உள்ள உள்ளூர் மக்களுக்கு பெரிய சவாலாக இருந்தது.

— ANI (@ANI) April 10, 2022

இதையடுத்து, இன்று (ஏப்ரல்10) காலை, பீராகரி சவுக்கில் உள்ள ஒரு விருந்து மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 7  தீயணைப்பு வாகனங்கள்  சம்பவ இடத்திற்கு விரைந்து,இதுவரை எந்த வித உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதனை போல், இன்று நடைபெற்ற மற்றொரு சம்பவத்தில், தீ விபத்து  ஏற்பட்டுள்ளது. அதன்படி, மோரி கேட், நிக்கல்சன் என்ற சாலையில் உள்ள ஒரு வீட்டில் தீ விபத்து  ஏற்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு, 12 தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளன. மேலும்  இதுவரை எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |