பிரான்ஸ் நாட்டில் அதிபர் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இப்பதவிக்கு 12 நபர்கள் போட்டியிடுகின்றனர். பிரெஞ்ச்குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே இத்தேர்தலில் வாக்களிக்க முடியும். புதுச்சேரியில் பிரெஞ்சு குடிஉரிமை பெற்றவர்கள்அதிகளவு வசித்து வருகின்றனர். இப்போது பிரெஞ்சு நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெறும் சூழ்நிலையில், புதுச்சேரியிலுள்ள பிரெஞ்சு குடிஉரிமை பெற்ற னைவரும் வாக்களிக்கவுள்ளனர்.
அதன்படி இவர்கள் வாக்களிக்க வசதியாக புதுச்சேரியில் இருஇடங்களிலும், காரைக்காலில் ஒரு இடத்திலும் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணி அளவில் தேர்தல் தொடங்கி உள்ள சூழ்நிலையில், புதுச்சேரியில் பிரெஞ்சு குடிஉரிமை பெற்ற அனைவரும் வாக்களித்து வருகின்றனர். அவர்கள் பிரெஞ்ச் நாட்டை சேர்ந்தவர்கள் என்பதற்காக அடையாள அட்டையை சரிபார்த்த பிறகே வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.