அகில இந்திய மல்லர் கம்ப விளையாட்டு போட்டியில் விழுப்புரம் மாவட்டத்தை சார்ந்த மாணவர் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
அகில இந்திய அளவில் பல்கலைக்கழகங்களுக்கான மல்லர் கம்பம் விளையாட்டு போட்டிகளானது சென்ற 3-ஆம் தேதி தொடங்கி 7-ஆம் தேதி வரை நடைபெற்ற நிலையில் தமிழகத்திலிருந்து ஆறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 60 மாணவர்கள் கலந்து கொண்டதில் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தின் சார்பாக விழுப்புரத்தில் இருந்து 12 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இளங்கலை பொருளாதாரம் பயிலும் மல்லன் ஹேமச்சந்திரன் என்பவர் மல்லர் கம்பம் தனித் திறன் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் இரண்டாவது முறையாக தங்கப்பதக்கம் பெற்ற பெருமையை பெற்றுள்ளார்.
இதை தொடர்ந்து இவர் ராஜஸ்தானில் இருந்து விழுப்புரத்திற்கு ரயிலில் நேற்று காலை வந்த பொழுது பெரிய மாலையணிவித்து மேளதாளங்களுடன் அவரை வரவேற்றனர். அதன்பிறகு மல்லன் ஹேமச்சந்திரன் படிக்கும் அரசு கல்லூரிக்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் கல்லூரி முதல்வர் சிவக்குமார், பேராசிரியர் மகாவிஷ்ணு, பொருளியல் துறை தலைவர் சக்திவேல், உடற்கல்வி இயக்குனர் ஜோதி உள்ளிடோர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.