இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நாளுக்குநாள் மோசமடைந்து வருகிறது. மேலும் அத்தியாவசிய பொருள்களின் விலை அதிகரிப்பும், தட்டுப்பாடும் மக்களின் வாழும் சூழலை வெகுவாக புரட்டிப்போட்டு இருக்கிறது. அத்துடன் எரிப்பொருள் பற்றாக்குறை, பல மணி நேரம் மின்வெட்டு, தொழிற்சாலைகள் மூடல், ஊழியர்கள் வேலை நிறுத்தம் என்று இலங்கை முழுதும் இயல்புநிலை முடங்கிஉள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே கொழும்பு நகரில் செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டியில்,
இலங்கை அரசு பொருளாதாரம் மீது கவனம் செலுத்தவில்லை என்று குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
அவர்களிடம் பல்வேறு முறை சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லும்படி கூறப்பட்டுவிட்டது. மத்திய வங்கி மற்றும் கஜானா துறை வழங்கிய அறிவுரையின் அடிப்படையில் செல்லக்கூடாது என்று அவர்கள் முடிவு செய்துவிட்டார்கள். அதற்கான விலையை இப்போது மக்கள் கொடுத்து வருகின்றனர். அரசாங்கத்தில் மாற்றம் வேண்டுமென அவர்கள் விரும்புவது புரிந்துகொள்ள முடிகிறது என்று தெரிவித்துள்ளார். அரசிடம் போதியஅளவு பணம் கையிருப்பு இருக்கும் என்று எனக்கு தெரியவில்லை. இதனால் அவர்கள் முன்னணி ஏற்றுமதி நிறுவனங்களிடம் கடனாக பணம் பெற்று வருகின்றனர். இந்தியாவின் எரிப்பொருளுக்கான நிதியுதவி வரும் மே 2-வது வாரத்தில் தீர்ந்துவிடும்.
அதன்பின் நாங்கள் தீவிர சிக்கலான நிலைக்கு செல்ல போகிறோம் என்று தெரிவித்தார். மேலும் இலங்கை அரசில் சீனமுதலீடு பெரியளவில் இல்லை. அவர்கள் முதலீடு செய்வதற்கு கேட்டுள்ளனர். எனினும் முதலீடுகள் இன்னும் வரவில்லை. கடன்களை திருப்பி செலுத்துவது தொடர்பாக மறுபரிசீலனை செய்வதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன என நான் நினைக்கிறேன். அதற்காக சீனஅரசிடம் அவர்கள் பேச இருக்கிறார்கள் என்ற அளவில் மட்டுமே எனக்கு தெரியும் என்று அவர் கூறியுள்ளார். இந்தியா முடிந்த வரையிலும் உதவி செய்துவிட்டே என்றே நான் நினைக்கிறேன். நிதிசாராத வழிகளில் அவர்கள் இன்னும் உதவிகொண்டு இருக்கின்றனர். அதன் காரணமாக அவர்களுக்கு நாங்கள் நன்றி கடன் பட்டவர்களாக இருக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.