Categories
மாவட்ட செய்திகள் வானிலை விருதுநகர்

வெளுத்து வாங்கும் மழை…. சில்லென்று வீசும் காற்று…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்தது. இந்நிலையில் வத்திராயிருப்பு பகுதியில் நேற்று மாலை 4 மணி அளவில் இடி மின்னலுடன் கூடிய கனத்த மழை பெய்ய தொடங்கியுள்ளது. இந்த மழை சுமார் 3 மணி நேரத்திற்கும் அதிகமாக நீடித்ததால் வத்திராயிருப்பில் தாழ்வாக இருக்கும் பகுதியில் மழைநீர் ஆறு போல் ஓடியது.

இந்நிலையில் சிவகாசியிலும் நேற்று முன்தினம் திடீரென பலத்த மழை பெய்தது. இதனையடுத்து சிவகாசி செங்கமலநாச்சியார்புரம் சாலையில் பராமரிப்பு பணி நடந்ததால் அப்பகுதியில் மழைநீர் தேங்கி நேற்று காலை முதல் வாகன ஓட்டிகள் சாலையை கடந்துசெல்ல பெரும் சிரமத்துக்குள்ளாகினர். அதே போல் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் நகர், சத்திரப்பட்டி, தளவாய்புரம், செட்டியார்பட்டி, முகவூர், சேத்தூர், தேவதானம் ஆகிய சுற்றுப்புற கிராமங்களிலும் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Categories

Tech |